ட்ரம்ப்பின் ஈரான் போர்க் கோரிக்கை! கடும் நெருக்கடியைச் சந்திக்கும் ஜப்பானியப் பிரதமர்
சர்வதேச அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் வொஷிங்டனில் ஒரு கடினமான நிலையைச் சந்தித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான போரில் ஜப்பான் தனது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும், குறிப்பாகப் பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது கடற்படைப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஜப்பானிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
மொசாட்டிடம் 1 மில்லியன் டொலர்கள் கோரிய இலங்கையின் முக்கிய புள்ளி.. இஸ்ரேலின் இரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல்
அமெரிக்காவின் முடிவு
ஜப்பானின் அரசியலமைப்புச் சட்டங்கள் வெளிநாட்டுப் போர்களில் நேரடியாகப் பங்கேற்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்த பிடிவாதமான கோரிக்கைகளைச் சமாளிப்பது ஜப்பானியத் தலைமைக்கு பெறும் சவாலாக மாறியுள்ளது.

ஈரான் உடனான நீண்டகால நட்புறவு மற்றும் எரிசக்தித் தேவைகளுக்காக அந்தப் பிராந்தியத்தைச் சார்ந்திருப்பது போன்ற காரணங்களால், ஜப்பான் இந்தப் போரில் நேரடியாகத் தலையிடத் தயங்குகிறது.
இருப்பினும், அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தக்கவைக்க வேண்டிய கட்டாயமும் ஜப்பானிற்கு உள்ளது.
ஜப்பானியப் பிரதமரின் நெருக்கடி நிலை
ட்ரம்ப் நிர்வாகம் ஜப்பானியப் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை (Tariffs) விதிப்பதாக மிரட்டி வருவதால், பொருளாதார நலன்களையும் நாட்டின் தற்காப்புக் கொள்கையையும் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானியப் பிரதமர் உள்ளார்.
வொஷிங்டனில் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலப் பாதுகாப்பு மற்றும் ஜப்பான்-அமெரிக்கா இடையிலான நீண்டகால உறவில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan