மொசாட்டிடம் 1 மில்லியன் டொலர்கள் கோரிய இலங்கையின் முக்கிய புள்ளி.. இஸ்ரேலின் இரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல்

Sri Lankan Tamils Sri Lanka Final War Israel Mossad
By Sajithra Mar 18, 2026 11:24 AM GMT
Report

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன, 1987ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்காக இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட்டிடம் (Mossad) 1 மில்லியன் டொலர்கள் நிதி உதவி கோரியிருந்ததாக சில ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்கள், இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சகத்தின் பகுதி ரீதியாக வெளியிடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

1987 ஒகஸ்ட் 6 மற்றும் ஒகஸ்ட் 14 திகதியிட்ட தூதரக தகவல் குறிப்புகளின் படி, கொழும்பில் இஸ்ரேலிய நலன் பிரிவை மூட வேண்டும் என்ற அரபு நாடுகளின் அழுத்தமும், உள்ளூர் எதிர்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், மொசாட் பிரதிநிதியுடன் நடைபெற்ற சந்திப்பில் இந்த நிதி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸுக்கு அருகில் மாபெரும் குண்டுகளால் தாக்குதல்.. பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

ஹோர்முஸுக்கு அருகில் மாபெரும் குண்டுகளால் தாக்குதல்.. பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்

தமிழர்களின் ஆயுத போராட்டம் 

இலங்கை, 1970ஆம் ஆண்டு அரபு நாடுகளின் அழுத்தத்தினால் இஸ்ரேலுடன் உள்ள தூதரக உறவுகளை துண்டித்திருந்தது.

மொசாட்டிடம் 1 மில்லியன் டொலர்கள் கோரிய இலங்கையின் முக்கிய புள்ளி.. இஸ்ரேலின் இரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல் | Jr Sought 1 Million From Mossad For Election

எனினும், 1984ஆம் ஆண்டு உள்நாட்டு போரின் தீவிரமடைதலுடன், அமெரிக்க தூதரகத்தின் கீழ் கொழும்பில் இஸ்ரேலிய நலன் பிரிவு திறக்கப்பட்டதன் மூலம் உறவுகள் பகுதி ரீதியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்ள இலங்கை இஸ்ரேலின் உதவியை நாடியிருந்ததா தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னணியில், 1980களின் இறுதிக்குள் சுமார் 30 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உபகரணங்களை இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கியிருந்தது.

இதில் Dvora வகை வேகக் கடற்படை கப்பல்கள், Mini-Uzi துப்பாக்கிகள், மின்னணு வேலிகள், தொடர்பு அமைப்புகள் மற்றும் வெடிகுண்டு பொருட்கள் அடங்கும். மேலும், இலங்கை இராணுவத்தினருக்கும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கும் இஸ்ரேலிய பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கியிருந்தனர்.

இலங்கையில் உளவிய இஸ்ரேலியர்கள் 

சில இஸ்ரேலிய பயிற்சியாளர்கள் “விவசாய ஆலோசகர்கள்” என்ற பெயரில் நாட்டில் செயல்பட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மொசாட்டிடம் 1 மில்லியன் டொலர்கள் கோரிய இலங்கையின் முக்கிய புள்ளி.. இஸ்ரேலின் இரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல் | Jr Sought 1 Million From Mossad For Election

குறிப்பாக வடக்கு பகுதிகளில், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் தாக்குதல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எதிர்கொண்டிருந்த சிறப்பு பணிக்குழுவிற்கும் (STF) இஸ்ரேல் உதவி வழங்கியதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், 1987ஆம் ஆண்டு ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சிக்குப் பின்னர் புதிய VIP பாதுகாப்பு பிரிவுக்கும் இஸ்ரேல் பயிற்சி வழங்கியது.

ஆவணங்கள், ஜே. ஆர். ஜயவர்தன நிதி கோரிக்கை வைத்ததை உறுதிப்படுத்தினாலும், அந்த 1 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

ஈரானின் மிகப் பலம் பொருந்திய தலைவர் படுகொலை.. மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் IRGC

ஈரானின் மிகப் பலம் பொருந்திய தலைவர் படுகொலை.. மிக மோசமான பதிலடிக்கு தயாராகும் IRGC

ஜயவர்தனவுக்கு ஆதரவு 

இருப்பினும், அவர் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவது இஸ்ரேலின் நலனுக்கு முக்கியமானது என இஸ்ரேல் அதிகாரிகள் கருதியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொசாட்டிடம் 1 மில்லியன் டொலர்கள் கோரிய இலங்கையின் முக்கிய புள்ளி.. இஸ்ரேலின் இரகசிய ஆவணங்களில் பரபரப்பு தகவல் | Jr Sought 1 Million From Mossad For Election

எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றிருந்தால், இலங்கையில் இருந்து இஸ்ரேலிய பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டிருக்கும் அபாயமும் இருந்ததாக கூறப்படுகிறது.

அதேவேளை, உள்நாட்டு போரின் போது இலங்கையில் மனித உரிமை நிலைமை மோசமடைந்தமை குறித்து - பொதுமக்கள் உயிரிழப்பு, கட்டாய காணாமல் போகல், வதை குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை - இஸ்ரேல் அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும், இருதரப்பு உறவுகளை பேணுவதற்காக இராணுவ மற்றும் உளவு உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆவணங்கள், இலங்கை - இஸ்ரேல் உறவுகள் 1980களில் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதையும், அக்காலத்தின் அரசியல் மற்றும் புவியியல் அரசியல் காரணிகள் அவற்றை எவ்வாறு வடிவமைத்தன என்பதையும் வெளிச்சமிடுகின்றன என குறித்த ஆவணங்கள் சுட்டிக்காட்டும் வகையில் உள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US