கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படும் நீர்கொழும்பு சிறைக் கைதிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்த பல சிறைக்கைதிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று மற்றும் இன்று காலை முதல் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகின்றது.
கைதிகளுள் இரு குழுக்கிடையே ஏற்பட்ட பாரிய மோதல் இந்த கலவரத்திற்கு வழிவகுத்துள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர
இந்தநிலையில், கலவரத்தில் 25 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 100 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பின் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில், சிறைச்சாலைக்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்படி, சிறைக்குள் படுகாயமடைந்த அதிகளவானோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதுடன், அவர்ளுள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri