நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

Sri Lanka Police Negombo Prisons in Sri Lanka
By Dhayani Jul 06, 2026 09:47 AM GMT
Report

புதிய இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறை அதிகாரி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த மோதலில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதுடன், கைதிகள் உட்பட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

மோதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சுமார் 100 பேர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும், அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

பத்தாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மோதல் காரணமாக ஏற்பட்ட காயங்களுடன் சுமார் 100 பேர் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களில் 13 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒன்பதாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக கைதிகள் முன்வாசல் வழியாக சிறையை விட்டு வெளியேற முயன்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகளவு பொலிஸாருடன், சிறப்பு அதிரடிப் படையும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கிச்சத்தம் கேட்டதை அடுத்து, சிறைக்கைதிகளின் உறவினர்கள் குவிந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளபட்டு வருகின்றது.

சம்பவ இடத்தில் நிலைமை தீவிரமடைந்து வருவதால் கட்டுப்படுத்த பொலிஸ், சிறப்பு அதிரடிப்படை, இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எட்டாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூடு காயங்களும் கண்டறியப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.    

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso

சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பிற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso

ஏழாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறையில் இன்று காலை (06) மீண்டும் ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரின் உடல்களில் துப்பாக்கிச்சூடு காயங்களும் கண்டறியப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

சிறைச்சாலையில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதுடன், அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இதற்கிடையில், கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் சிறையை சுற்றி அமைதியற்ற முறையில் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறாம் இணைப்பு

இன்று காலை (06) நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மோதலில் சிறை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

உயிரிழந்தவர்களில் நான்கு சிறை அதிகாரிகளும், நான்கு கைதிகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.

தற்போது சிறை வளாகத்திற்குள் நுழைந்துள்ள பொலிஸாரும், சிறப்பு அதிரடிப் படையினரும் மோதல் சூழ்நிலையை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், காயமடைந்த அதிகாரிகளும், கைதிகளும் இன்னும் சிறைக்குள் இருப்பதாகவும், அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  

ஐந்தாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) ஏற்பட்ட மோதலில் சிறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த சுமார் 50 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப்படையினர் என்றும், பதற்றமான சூழலை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் பலமுறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso

நான்காம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் மூவர் சிறை அதிகாரிகள் என்றும், ஒருவர் கைதி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஏராளமான அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், காயமடைந்தவர்களில் சிறைக்கைதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், காயமடைந்த அதிகாரிகளும், கைதிகளும் இன்னும் சிறைக்குள் இருப்பதாகவும், அவர்களை மீட்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso 

மூன்றாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் இருவர் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும், மோதலில் காயமடைந்த சுமார் 35 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வன்முறை- பின்னணியில் அரங்கேற்றப்பட்ட சதி அம்பலம்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் வன்முறை- பின்னணியில் அரங்கேற்றப்பட்ட சதி அம்பலம்

பாதுகாப்புப்படையினர் பலமுறை துப்பாக்கிச்சூடு

நிலைமையைக் கட்டுப்படுத்த நீர்கொழும்பு பொலிஸார் மட்டுமின்றி, மிரிகம மற்றும் வெயங்கொட உள்ளிட்ட அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso

இந்நிலையில், பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையும் களமிறக்கப்பட்டுள்ள4னர்.

மேலும், கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக பல சிறை அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைதிகளால் தாக்கப்பட்டு காயமடைந்த ஆறு சிறை அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் காயமடைந்த சுமார் 20 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso

முதலாம் இணைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை (06) மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் சிறைச்சாலைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது.

நீர்கொழும்பு சிறையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் ...!

நீர்கொழும்பு சிறையில் கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் கட்டுப்பாட்டுக்குள் ...!

கைதிகள் குழுக்களுக்கு இடையே மோதல்

விளக்கமறியலில் இருந்த கைதிகள் குழுவிற்கும், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே இந்த மோதல் நடந்ததாக பொலிஸார் விளக்கமளித்திருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..! | Tensions Rise Again At Negombo Priso

இந்த மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 38 பேர் காயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பொலிஸாரின் தலையீட்டில் நேற்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இன்று காலை மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார் - ஒருவர் கைது

கிராண்ட்பாஸ் அடுக்குமாடி குடியிருப்பை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார் - ஒருவர் கைது

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US