கைதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள்! மோசமாகும் நீர்கொழும்பு சிறையின் கள நிலவரம்..
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காயமடைந்தவர்களை மீட்பதில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் காயமடைந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைதிகளின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்பதில் கடும் சிரமத்தையும் எதிர்ப்புகளையும் அதிகாரிகள் எதிர்கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!
பதிலடித் தாக்குதல்
இன்று காலை தொடக்கம் நண்பகல் தாண்டிய நிலையிலும் சிறைச்சாலைக் கைதிகளில் ஒரு பிரிவினர் தொடர்ந்தும் தீவிர மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, அவர்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி பல்வேறு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மோதலில் ஈடுபட்டுள்ள கைதிகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பதிலுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கைதிகள் மீது பதிலடித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே காயமடைந்த நிலையில் இன்னும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலர் கைதிகளினால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கைதிகளின் மோதல் குறித்த செய்திகள் வெளியானவுடன் அவர்களின் உறவினர்கள் பெருமளவில் சிறைச்சாலை முன்பாக ஒன்றுதிரண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
YOU MAY LIKE THIS VIDEO