நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Ministry of justice Sri lanka NPP Government
By Rakesh Jul 06, 2026 05:38 AM GMT
Report

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய திசைகாட்டி அரசு நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்று ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் நேற்று(05.07.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 26 பேர் பலி - காயங்களுடன் சிறைக்குள் கைதிகள்: பலரது நிலைமை கவலைக்கிடம்..!

உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயது

மேலும் தெரிவிக்கையில், "நமது நாட்டின் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசமைப்புகளின்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவர் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு | Niroshan Pathukka Strongly Accuses Government

எனினும், தற்போதைய அரசு இந்த ஓய்வுபெறும் வயதை மேலும் நீடிப்பதற்குத் திடீர் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது இது குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின்படி, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 இலிருந்து 19 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 இலிருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

ஆனால், கடந்த சில மாதங்களில் மட்டும் நீதித்துறை அமைப்பில் 8 நீதியரசர்கள் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த வெற்றிடங்களுக்கான தகுதியான பெயர்களை ஜனாதிபதி இதுவரை அரசமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னுரிமை வழங்கி வருகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெற வேண்டும். ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாயின், அது ஏன் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்? நாட்டின் நீதிவான் நீதிமன்ற நீதிவான்கள், மேல் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் அரச சேவையின் ஏனைய உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதும் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா?

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

பிரதம நீதியரசரின் பதவிக்காலம்

பிரதம நீதியரசர் ஓய்வுபெறுவதால் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு ஒருபோதும் வீழ்ச்சியடைந்துவிடாது. ஆனால் அவரது பதவிக்காலத்தை அரசியல் தேவைகளுக்காக நீடிப்பது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குக் கடுமையான மற்றும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

நீதித்துறைக்குள் அரசின் நேரடி அரசியல் தலையீடு : நிரோஷன் பாதுக்க கடும் குற்றச்சாட்டு | Niroshan Pathukka Strongly Accuses Government

தற்போது நீதித்துறை முறைமையானது அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை நாட்டு மக்களுக்கு இல்லை, அது தற்போதைய அரசுக்கே உள்ளது. அரசின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயங்களைச் செயல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசுக்குப் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்களே தவிர, அரசமைப்பைத் திருத்தி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல.

எனவே, ஜனாதிபதியும் அரசும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் இந்த சவால்களுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் நாடெங்கிலும் முன்னெடுக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US