தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்..

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By T.thibaharan Jun 30, 2026 11:34 AM GMT
Report

இலங்கைத்தீவின் 78 ஆண்டுகால ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் சார்ந்து பேசப்படுகின்ற போது "சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகளுடன் ஈழத் தமிழர்கள் கைகோர்க்க வேண்டும்" என்று பலதரப்பட்டவர்களும் பேசுகின்றனர்.

அதிலும் தமிழ் தரப்பில் இருக்கும் இடதுசாரிகள் என தம்மை அடையாளப் படுத்துகின்றவர்கள் அல்லது தாராள வாதிகள் எனப்படுவோர் குரல் எழுப்புகின்றனர்.

இந்த கூற்றை மந்திர உச்சாடனமாக தேர்தல் காலங்களிலும், தமிழர் அரசியல் தீர்வு பற்றி பேசுகின்ற போதும் உச்சாடனம் செய்வதை காணமுடிகிறது. 

அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் வர்த்தகர் கைது!

அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் வர்த்தகர் கைது!

சிங்கள இனவாதிகளின் அட்டகாசம்

அப்படியானால் இந்த முற்போக்கு சக்திகள் யார்? இவர்கள் கருதும் அந்த முற்போக்கு சக்திகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக ஏதாவது ஒரு உப்புக் கல்லைத்தானும் பெற்றுக்கொடுத்தார்களா? என்பதை பற்றி அறிவது அவசியமானது.

இவர்கள் குறிப்பிடும் முற்போக்கு சக்திகள் யார்? சிங்கள தேசத்தில் இருக்கின்ற தமிழர்களுக்கு அனுதாபம் தேடுவது போன்று பேசி தமிழர்களை அழிக்கும் அரசியலை மேற்கொள்ளும் தாராளவாதிகளும் இடதுசாரிகள் என்ற பெயரில் உலாவரும் இனவாதிகளையுமே எப்போதும் காணமுடிகிறது.

தற்போது இந்த ஜனநாயக மூலாம் பூசிய சிங்கள முற்பாளர்களையும், சிங்களக் கல்விமான்கள் பற்றியும் அதிகம் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

ஏனெனில் சிங்கள இடதுசாரிகள் 1965ஆம் ஆண்டுடன் மரணத்தை தழுவி விட்டார்கள். இப்போது இருப்பவர்கள் இடதுசாரிகள் என்ற போர்வையில் இருக்கும் இனவாதிகள் மாத்திரமே.

சிங்கள தேசத்தின் முற்போக்கு சக்திகளாக குறிப்பிடப்படுபவர்கள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசுவது, வாக்குறுதிகளை அள்ளி வீசுவது, கடந்தகால ஆட்சியாளர்களை நோக்கி குற்றம் சுமத்துவது, எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தேனாறும் பாலாறும் ஓடும் என மாயமான்களை காட்டும் சிங்களத் தலைவர்களையே தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர் என்பது மட்டுமல்ல தொடர்ந்து அவர்களிடம் தமிழ் அரசியல்வாதிகள் முதல் பாமர மக்கள் வரை ஏமாந்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் இடவிசாரிகள் எனப்படுவோர் “இப்போது அனுரகுமாரா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நம்பலாம்” என்றும், “ஜே.வி.பி இடதுசாரி ஆயுத கிளர்ச்சியாளர்கள் இப்போது இனவாதக்கட்சி அல்ல”என்றும் “அவர்கள் சிங்கள அரசியலை நடத்துவதற்காக தந்துரோபாயமாக சிங்கள மக்களிடம் இனவாதம் பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் நடைமுறையில் இனவாதிகள் அல்ல” என்றும் புதிய விளக்கம் கொடுக்க முற்பட்டிருக்கிறார்கள். 

கோட்டபய ஆட்சிக்காலம்

இந்த தமிழ் இடதுசாரிகள் ஒன்றில் மாக்ஸியத்தை நல்ல ஆசான்களின்கீழ் கற்றிருக்க வேண்டும் அல்லது லெனினிஸசத்தையோ, லெனினிய இஸ்டாலினிஸத்தையோ, தத்துவார்த அனுகுமுறையில் ஆராய்ந்திருக்க வேண்டும்.

தத்துவம் எனப்படும் மெய்யியல் பற்றி எதுவுமே தெரியாமல் எழுதப்படுகின்ற மாக்ஸிச வியாக்கியானங்களை வாசித்து விட்டு, அதற்கு தவறான விளக்கங்களையும் கொடுத்துக் கொண்டு, தங்களை மார்க்சிஸ்ட் என்றும் இடதுசாரி என்றும் சொல்வது அருவருக்கத்தக்கது.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

லெனினிஸசத்தின் தேசிய இனங்கள் பற்றிய ஜனநாயக நீதி முறைமையையே தவறென கற்பிக்கும் ரோகண விஜயவீரா பெருந்தேசிய வாதத்தால் தமிழினம் விழுங்கப்படுவதை நியாயம் என கற்பிக்கிறார், அதுவே நீதி என்கிறார்.

லெனினிஸ கோட்பாட்டையே மறுதலித்து, இனவாதத்தை முன்னிலைப்படுத்தும் ஒருவரை தலைவனாக கொண்ட கட்சியினரை எப்படி நம்புவது?

அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ் மக்கள் சார்ந்து ஏதாவது ஒரு அரசியல் தீர்வை முன்வைத்தார்களா? அவர்கள் ஒருபோதும் எந்தவொரு தீர்வு திட்டத்தையும் முன்வைக்க மாட்டார்கள் என்பதுவே உண்மையாகும்.

இந்த நிலையில், இடதுசாரிகளாயினும் சரி, வலதுசாரிகளாயினும் சரி, தாராளவாதிகளாயினும் சரி, சிங்கள கல்விமான்களாயினும் சரி அவர்கள் தமிழின அழிப்பில் குறியாக இருந்து அதனை முன்னெடுத்துச் செல்வதையே அவர்களுடைய அலட்சியமாகும்.

தமிழர்களுக்கான விட்டுக்கொடுப்பு

அண்மையில் யாழ்ப்பாணத்தில் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 49வது நினைவுநாள் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்டு, “சமஷ்டி முறையும் அரசியலமைப்புச் சீர்திருத்தப் பாதையும்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

அப்போது 2004ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தையின் போது தமிழர்களின் விட்டுக்கொடுப்பற்ற தன்மையே தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை அடைய முடியாமல் போய்விட்டது" என்று குறிப்பிட்டு பேசினார்.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

இது எத்தகையொரு அபத்தமான பேச்சு! தமிழ் மக்களை தொடர்ந்து முட்டாளாக்குவதும், ஏமாற்றுவதிலும் அரசியல்வாதிகள் மாத்திரம் அல்ல சிங்கள புத்திஜீவிகளும், கல்விமான்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இது வெளிக்காட்டி இருக்கிறது.

இந்தப் பொய்யான விஷமத்தனமாக கருத்தியலையே சிங்கள சமூகத்தினரும், அதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களினதும், கல்விமான்களினதும் புத்திஜீவிகளின், பௌத்தப்பிக்குகளினதும், சாதாரண சிங்கள மக்களினதும் நிலைப்பாடாகும்.

இதுவே சிங்களப் பொதுக் கருத்து மண்டலமாக கடந்த 78 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் தமக்குரிய அரசியல் உரிமைகளை பெறுவதற்கு எந்தளவுக்கு விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும்? என்பதனை முதலிலேயே வரையறை செய்ய வேண்டும்.   

பெருந்தேசிய வாதம்

ஒரு பெருந்தேசிய வாதம் ஒரு சிறிய தேசிய இனத்தை அடக்குகின்றபோது இரு தரப்புக்கும் ஒரு பேச்சுவார்த்தை அல்லது ஒரு சமாதான முயற்சியில் ஈடுபடுவதற்கு இரு தரப்பும் சமத்துவம் உள்ளவர்களாக முதலில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இரண்டாவதாக ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு ஒடுக்குகின்ற பெரும்பான்மை இனம் தான் விட்டுக் கொடுப்புகளை செய்ய வேண்டுமேயொழிய அளவால் சிறிய தேசிய இனம் விட்டுக்கொடுப்புகளை செய்ய முடியாது, செய்யவும் கூடாது.

இதனை கனடாவின் பிரஞ்சு மொழிபேசும் மாநிலமான கியூபெக் உடன்பாட்டில் தெளிவாக காணமுடியும். ஆனால் இலங்கைத் தீவிலே அதற்கு நேர் எதிர்மாறாக சிறுபான்மையினர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்வது மிக மோசமான இனப்படுகொலை மனநிலையின் வெளிப்பாடு.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

சிங்கள சமூகத்தில் மிகவுயர்ந்த நிலையில் இருக்கின்ற பேராசிரியர் ஜி எல் பீரிஸ் அவர்களிடமிருந்து இருந்து இத்தகைய கருத்து வருகிறது என்றால் "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி பொருந்துவதாக உள்ளது. தமிழ் மக்களின் விட்டுக் கொடுப்பு பற்றிய ஒரு வரலாற்று பார்வையை இங்கே பார்ப்பது மிக அவசியமானது.

மலையக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போராடாமல் அமைதியாக இருந்தது. அந்த மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமைக்கு துணை போய்விட்டது என்பதனாலே தான் எஸ்.ஜே.பி செல்நாயகம் 1949ஆம் ஆண்டு இலங்கை சமஸ்டி கட்சியை ஆரம்பித்தார். 

தமிழர் தாயகத்துக்கான சமஸ்டி ஆட்சிமுறை

அந்தக் கட்சி தமிழர் தாயகத்துக்கு தனியான சமஸ்டி ஆட்சி வேண்டும் என்ற கொள்கைக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. 1956 தேர்தலில் தமிழர் தரப்பில் கூடிய ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. அன்றுதான் ஜி.ஜி.பொன்னம்பலத்திடமிருந்து தமிழர்களுக்கான தலைமை செல்வநாயகத்திடம் கைமாறியது.

தனிச் சிங்களச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டதை அடுத்து 04-02-1957 இலங்கையின் சுதந்திர தினம் என்பது அதை சிங்கள மக்களுக்கு மட்டுமே உரியது தமிழ் மக்களுக்கு உரியது அல்ல என்று கூறித் தமிழரசுக் கட்சி சுதந்திர தினத்தை கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி, பூரண கடையடைப்பு, கறுப்புக் கொடி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க வடக்கு -கிழக்கு மாகாணங்கள் எங்கும் தமிழ் மக்கள் பூரண ஹர்த்தால்-- கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.

அன்றைய நாள் திருமலை நகரில் நடராஜன் என்ற இளைஞர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் கறுப்புக்கொடி கட்டுவதற்காக ஏறினார்.

அப்போது திருமலை மீன் சந்தையில் இருந்து சிங்களப் பேரினவாதி ஒருவனால் திருமலை நடராஜன் குழல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரே சிங்கள அரச எதிர்ப்புப் போராட்டத்தில் களப்பலியான முதலாவது தமிழர் ஆவார்.

அரசியல் நிலைப்பாடு

சம நேரத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சேர்ந்த சிங்கள இனவாத அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். அந்த அடிப்படையில் தமிழ் காங்கிரஸ் 1957ஆம் ஆண்டில் ஆ.தியாகராஜா “24 லட்சம் தமிழர்களக்கு ஒரு தனி இராச்சியம்” என்ற நூலை வெளியிட்டார்.

இத்தகைய தனிநாட்டு கோரிக்கையும், சமஸ்டி கோரிக்கையும் எழுந்திருந்த நிலையில் செல்வநாயகம் சமஸ்டி கோரிக்கையை விட்டு இறங்கி வட- கிழக்கு தமிழர் தாயகத்தை 3 பிராந்தி சபைகளாக பிரிக்கும் தீர்வு திட்டத்திற்கு உடன்பட்டு முதலாவது விட்டுக் கொடுப்பை செய்தார்.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

அந்த விட்டுக்கொடுப்பின் பிரகாரம் தான் 26-07-1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் (பிராந்திய சபைகளை உருவாக்கவது) கையெழுத்தாகியது.

தமிழ் தலைவர்களின் அந்த விட்டுக் கொடுப்பை சிங்களர்களின் இனவாத கண்களுக்கு தெரியவில்லை அது ஜி.எல்.பீரிசுக்கும் தெரியாதது ஆச்சரியம் தான்.

பண்டா-செல்வா ஒப்பந்தம்

தமிழர் தாயகத்தை மூன்றாகப் பிரிக்கின்ற ஒரு விட்டுக் கொடுப்புக்கு செல்வநாயகம் சென்று பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கச்சாத்திட்ட பின்னரும் இனவாத கோரமுகம் அதனையும் ஏற்றுக் கொள்ளாமல் அந்த ஒப்பந்தம் கிழித்தறியப்பட வேண்டும் என்று 04-10-1957 களனி ராஜமகா விகாரையின் விகாராதிபதி புத்திர கித்திரதேரர் உள்ளிட்ட 200 பிக்குகளும் ஜே. ஆர் ஜெயவர்த்தனா உள்ளிட்ட சிங்களத் தலைவர்களும் கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரை செய்தனர். அத்துடன், உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

தம் கண்முன்னே அந்த ஒப்பந்த பத்திரம் கிழித்தறியப்படாவிட்டால் உண்ணாவிரதம் கைவிடப்பட மாட்டாது என பிக்குகளும் சிங்கள தலைவர்களும் விடாப்பிடியாக நின்றதனால் பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தை முன்னிலையில் தனது கையால் கிழித்தெருந்து காட்டியதன் பின்னர் தான் அந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது என்பதனை சிங்களத் தலைவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

மறதி வியாதி பிடித்த சிங்களத் தலைவர்களுக்கு தமிழ் தலைவர்கள் அதனை அடிக்கடி நாடாளுமன்றத்தில் பேசி ஞாபகப்படுத்த வேண்டியது அவசியமானது.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தறியப்பட்ட பின்னரும் செல்வநாயகம் தொடர்ந்து விட்டுக்கொடுப்புகளை செய்ய தயாராகவே இருந்தார். ஆனாலும் இனவாத சிங்களத் தலைவர்கள் மக்களை மேலும் ஒழிப்பதிலேயே குறியாக இருந்தனர். அதன் ஒரு பகுதியாக 1960ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கம் சிங்கள மொழியை வடக்கு- கிழக்கு உட்பட நாடு முழுவதும் நீதிமன்ற நிர்வாக மொழியாக்கும் சட்டமூலத்தை அன்றைய நீதி அமைச்சர் சாம் பி.சி.பெனான்டோ வாயிலாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து, 01-01-1961 தனிச்சிங்களச் சட்டத்தை நாடு முழுவதும் நிர்வாக மொழியாக நடைமுறைப்படுத்துவதென அரசாங்கம் அறிவித்து அதன் இனவாத கோர முகத்தை காட்டியது.

இந்நிலையில் தான் 21-01-1961 தனிச்சிங்களச் சட்டத்துக்கு எதிராக தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

அதன் தொடர்ச்சியாக அறவழிப் போராட்டமாக 20-02-1961 சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர் நடத்திய ஒரு சாதிக போராட்டத்தையே சகித்துக் கொள்ள முடியாத சிங்கள தேசம் சிங்கள தேசத்தின் நாடாளுமன்றம் 17-04-1961ல் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியது.

அந்த சட்டத்தை பயன்படுத்தி 18-04-1961ல் ஜனநாயக வழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செல்வநாயகம் உட்பட தமிழ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் பனாகொடை இராணுவ முகாமில் அடைக்கப்பட்டனர். 

58 நாட்கள் கழித்து போராட்டம்

இதனைத் தொடர்ந்து 58 நாட்கள் கழிந்த நிலையில் சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது. இத்தகைய சூலமைவில்தான் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் அவர்கள் 1964 ““ஈழம்““ என்ற செல்லை Eylom..beginig of freedom struggle““ பயன்படத்தி நுால் வெளியிட்டார்.

இதற்குப் பின்னரும் செல்வநாயகம் அவர்கள் மேலும் விட்டுக் கொடுப்புகளை செய்து தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒன்றை பெற்று விடலாம் என்ற நப்பாசையில் டட்லி சேனநாயக்கா உடன் பேரம் பேசி அவருடைய தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்து அதனுடாக 24-03-1965ல் டட்லி-செல்லா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர்.

அந்த விட்டுக் கொடுப்பு என்னவேனில் தமிழர் தாயகத்தை ஏழு மாவட்டங்களாக பிரித்து ஏழு மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கி அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கலை செய்வது. இவ்வாறு முன்பிருந்ததலும் கூட இன்னும் பன்மடங்குக்கு கீழே இறங்கி வாங்கி வந்து செல்வா மீண்டும் பெரிய அளவானதொரு விட்டுக்கொடுப்பைச் செய்தார். ஆயினும் அந்த குறைந்தபட்ச தீர்வு தானம் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தறியப்பட்டு தமிழ் தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்கள்.

அந்த ஏமாற்றத்தின் விளைவுகளின் ஒட்டுமொத்த வடிவம்தான் 14-05-1976ல் வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் தமிழ் தலைவர்கள் ஒன்று கூடி தனி நாடு ஒன்றிய தமிழர்களுக்கு தீர்வு என்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தை மேற்கொண்டார்கள்.

அந்த வட்டுக் கொட்டு தீர்மானத்தையே தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் தாயகத்தில் 78% ஆதரவு வாக்குகளை பெற்று அதனை மக்கள் ஆணையாக உலகத்தின் நிறுத்தினர்.

தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி தமிழர் தாயகம் ஒன்று திரண்டு நின்ற வேளையிலும் தமிழ் தலைவர்கள் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தார்கள்.  

ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான மாநாடு

அதனை அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF), ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் கொண்டுவந்த மாவட்ட அபிவிருத்திச் சபை (DDC) திட்டத்தை ஒரு தற்காலிக அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதி முடிவை 1980 ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட கட்சியின் அவாறங்கல் மாநாட்டில் (Avarangal Convention) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் 1980 ஆகஸ்ட் 21 அன்று சமர்ப்பிக்கப்பட்டு, 1980 செப்டம்பர் 22 அன்று நிறைவேற்றப்பட்ட "1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டத்திற்கு" (Development Councils Act No. 35 of 1980) ஆதரவாக த.வி.கூட்டணி செயற்பட்டது.

தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. | Tamil Politics And Sinhala Buddhist Political

இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில், 1981 ஜூன் 4 அன்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) நேரடியாகப் போட்டியிட்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட-கிழக்கின் பெரும்பான்மையான மாவட்டங்களைக் கைப்பற்றியது.

தாயினும் இந்த மாவட்ட உறுதி சபை தேர்தலுக்கு போராட்ட இயக்கங்கள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன என்பதும் அன்றைய காலத்தில் நூலக எரிப்பு தமிழ் மக்களை அரசுக்கு எதிராக செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அந்த தேர்தலை பயன்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெருவாரியாக வாக்களித்தனர் என்பதுவே அன்றைய கால நிலவரம் ஆகும்.  

கொழும்பிற்கான விமான சேவைகளை அதிகரித்த கட்டார் எயார்வேஸ்

கொழும்பிற்கான விமான சேவைகளை அதிகரித்த கட்டார் எயார்வேஸ்

அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள்

அஸ்வெசும பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட இலட்சக்கணக்கான குடும்பங்கள்


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US