ரஷ்யாவுக்கு ட்ரம்பின் காலக்கெடு! அதிகரிக்கும் பதற்ற நிலை
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு 10 முதல் 12 நாட்கள் காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தில் இன்று(28) நடந்த சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது, முன்னர் விதித்த 50 நாட்கள் காலக்கெடுவை குறைக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னேற்றம் இல்லை
இதன்படி, குறித்த காலக்கெடு ஒகஸ்ட் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான விரக்தி காரணமாக ட்ரம்ப் இந்த முடிவை எடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
50 நாட்கள் காலக்கெடுவை விதித்த போதிலும் ரஷ்யாவின் தரப்பிலிருந்து எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரோன் குண்டுவெடிப்பு
அத்துடன், குறிப்பிடப்பட்ட காலத்துக்குள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை எனில், ரஷ்யா மற்றும் அதன் வர்த்தக பங்காளிகள் மீது கடுமையான வரிகள் மற்றும் புதிய தடைகள் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறிருக்க, 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளுடன் இரவோடு இரவாக பாரிய தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளது.
கியேவில், நடந்த ஒரு ட்ரோன் குண்டுவெடிப்பில் 4 வயது சிறுமி உட்பட எட்டு பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam
