ஜனாதிபதி அநுரவும் - நாமல் ராஜபக்சவும் ஒரே விமானத்தில் பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும், ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அதிகார விஜயமொன்றை மேற்கொண்டு மாலே நகருக்குச் சென்றுள்ளார்.
திருமண விழா
அதே நேரத்தில், நாமல் ராஜபக்ச, அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க மாலைத்தீவிற்கு சென்றுள்ளார்.

இவர்கள் இருவரும் கொழும்பு முதல் மாலே வரை பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 101 இன் வணிக (Business Class) பிரிவில் இருந்தனர்.
இந்த தற்செயலான சந்திப்பு அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.
இதேவேளை, நாமல் ராஜபக்சவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு