ஈரானின் மற்றுமொரு உயர்மட்ட அதிகாரி படுகொலை.. இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு
ஈரானின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சரை படுகொலை செய்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரானின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் எந்த உறுதிப்படுத்தலையும் இன்னும் வழங்கவில்லை.
ஹோர்முஸுக்கு அருகில் மாபெரும் குண்டுகளால் தாக்குதல்.. பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்காவின் நகர்வுகள்
ஈரானின் உறுதிபடுத்தல்..
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், இது இரண்டு நாட்களில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் படுகொலை செய்யப்படும் மூன்றாவது நிகழ்வாக இருக்கும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இஸ்மாயில் கதிப், 2021இல் மறைந்த இப்ராஹிம் ரைசியால் ஈரானின் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஈரானின் மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி உட்பட பல உயர்மட்ட மதகுருக்களிடம் அவர் இஸ்லாமிய நீதித்துறையைப் பயின்றார்.
அவர் உளவுத்துறை அமைச்சகத்திலும் உயர்மட்ட தலைவரின் அலுவலகத்திலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
2022இல், ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தின் தலைவராக இருந்தபோது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக இணையவழி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அமெரிக்க கருவூலத்தால் அவர் மீது தடை விதிக்கப்பட்டது.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, 1980இல் கதிப் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையில் (IRGC) சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam