விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்

Muttiah Muralitharan Jaffna Sri Lanka Cricket Sri Lanka Sri Lankan Peoples
By Dhayani Sep 14, 2023 04:17 AM GMT
Report

தமிழீழ விடுதலைப்புலிகளினால் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவர்கள் விளையாட்டினையும், அரசியலினையும் வெவ்வேறாக வேறுப்படுத்தி தனது இலக்கை நோக்கி பயணித்ததாகவும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் -முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் முக்கிய நகர்வுகள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டு (Video)

தமிழ் -முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் முக்கிய நகர்வுகள் குறித்து பகிரங்க குற்றச்சாட்டு (Video)


விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல் | Srilanka Cricketer Muttaiah Muralitharan Film

தமிழீழ விடுதலைப்புலிகள் இலக்கு

தமிழீழ விடுதலைப்புலிகள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு ஒருபோதும் தடைவிதிக்காது அரசியலினையும்,விளையாட்டினையும் வேறுப்படுத்தி பார்த்தனர். அவர்களின் குறிக்கோள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்துறை சார்ந்ததே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டு ஐ.நாவின் உணவு தூதராக இலங்கையில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையகத்திற்கு மூன்று முறை சென்றிருந்தேன்.இருப்பினும் தலைவர் பிரபாகரனை இச்சந்தர்ப்பங்களில் சந்திக்க முடியவில்லை.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல் | Srilanka Cricketer Muttaiah Muralitharan Film

இதன்போது வடகிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஐ.நாவினால் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்கள் ஒழுங்கான முறையில் பாதிக்கப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றதா என்பதினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்.

இந்த சந்தர்ப்பத்தில், விடுதலைப்புலிகளின் தலைமையகத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து அங்கு மதிய உணவினை உட்கொண்டேன்.

மேலும், தனியார் நிறுவனமொன்றினால் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியில் விடுதலைப்புலிகளின் இடங்களுக்கு சென்று கிரிக்கெட் விளையாடியதாகவும், தனக்கு தமிழீழ விடுதலைப்புலிகளினால் எவ்வித தடையும் ஏற்படவில்லை.

சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக நாளை பதவியேற்கும் யாழ்.தமிழர்

சிங்கப்பூரின் 9 ஆவது ஜனாதிபதியாக நாளை பதவியேற்கும் யாழ்.தமிழர்


'800' திரைப்படத்தின் உள்ளடக்கம் 

இருப்பினும், இந்த காலப்பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குண்டுகளுக்கு பார்வையில்லை என்பதினால் சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலை சுமார் 30 ஆண்டுகளாக இலங்கையில் காணப்பட்டது.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல் | Srilanka Cricketer Muttaiah Muralitharan Film

அதேவேளை, சுனாமி அனர்த்தத்தின் போதும் விடுதலைப்புலிகளின் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உணவு வழங்கல் செயற்பாட்டையும் முன்னெடுத்ததுடன் மக்களுடன் நேரடியாக கதைத்து பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்தேன்.

இந்த காலக்கட்டத்தில் தான் பார்த்த மற்றும் எதிர்நோக்கிய விடயங்களே முத்தையா முரளிதரன் சுயசரிதையை தழுவி '800' என்ற பெயரில் வெளியாகும் திரைப்படத்தில் இடம்பிடித்துள்ளதாகவும், பிரமாண்டத்திற்காக கதைகளை ஒருபோதும் திரிபுப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்.     

பாதுகாப்பிற்காக யாழிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் (VIDEO)

பாதுகாப்பிற்காக யாழிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் (VIDEO)


ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு! பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள்

ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு! பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள்




மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US