வங்கக்கடலில் தீவிரமடையும் முரசு சூறாவளி - கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

Sri Lanka Fisherman Weather Heavy Rain
By Dhushi Nov 02, 2026 03:27 PM GMT
Report

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடற்பகுதியில் உருவெடுத்துள்ள ‘முரசு’ சூறாவளி நிலைமை காரணமாக, வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று(02.11.2026) ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றும் போதே கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று(02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய வானிலை அறிக்கையின்படி, மத்தியமேற்கு வங்கக்கடற்பகுதியில் 'முரசு' எனும் சூறாவளி நிலைமை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகக் குறித்த கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் அலைகள் கொந்தளிப்பாகவும் மிகவும் சீற்றமாகவும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தீவிரமடையும் முரசு சூறாவளி - கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை | Warning Issued To Avoid Fishing Sea Areas

இதற்கமைய, கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் தொழில்புரியும் சிறிய படகு மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே இந்த பகுதிகளில் கடலுக்குச் சென்றுள்ள சிறிய படகுகள், நிலவும் பலத்த காற்று காரணமாகப் பாதுகாப்பாகத் தொழிலில் ஈடுபட முடியாத அபாய நிலை உருவெடுத்துள்ளதால், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கியோ அல்லது கரைக்கோ திரும்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடற்றொழிலாளர்களுக்கான அறிவிப்பு

ஏனைய பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும் தங்கள் பகுதிகளில் நிலவும் காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் நிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

வங்கக்கடலில் தீவிரமடையும் முரசு சூறாவளி - கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை | Warning Issued To Avoid Fishing Sea Areas

மேலும், கடலுக்குச் செல்லும்போதும், தொழிலில் ஈடுபடும்போதும் மற்றும் திரும்பும்போதும் உயிர்காப்பு அங்கிகளை கட்டாயம் அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தால் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு மீனவச் சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என்றார்.

 மேலதிக தகவல் ராகேஷ்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US