வெடித்துச் சிதறி பரபரப்பை ஏற்படுத்திய விமான விபத்து.. பதற்றமளிக்கும் விமானியின் இறுதி வார்த்தைகள்
அமெரிக்கா - புளோரிடாவில் உள்ள கிரீன் ஏக்ரஸ் குடியிருப்பு பகுதியில் Learjet 60 ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை மற்றும் கனமழையை எதிர்கொண்ட போது விமானி, நிலைமையை சமாளிக்கும் விதமாக மேலும் 2,000 அடி உயரத்தில் பறக்க வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரியுள்ளார்.
அனுமதி கிடைத்த சிறிது நேரத்திலேயே 41,000 அடி உயரத்தை எட்டிய விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கீழே இறங்கத் தொடங்கியுள்ளது.
மே டே.. மே டே..
விபத்து நிகழப்போவதை உணர்ந்த விமானி, வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு பதற்றத்துடன் பேசிய இறுதி குரல்பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
EXTREME CLOSEUP shows PLANE DIVING INTO THE GROUND LIKE A MISSILE before MASSIVE EXPLOSION in FLORIDA https://t.co/b2I6qVjMt2
— RT (@RT_com) November 1, 2026
மோசமான பனிமூட்டம் மற்றும் வானிலை காரணமாக விமானம் நிமிடத்திற்கு 8,000 அடி வீதம் வேகமாக கீழே இறங்குவதாகவும், "மே டே... மே டே... 10,000 அடி கீழே இறங்குகிறோம்" என்றும் அலறியுள்ளார்.
தொடர்ந்து நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் சரிந்து தரையை நோக்கிச் செல்வதாகவும், விமானம் நொடியில் மோதி வெடிக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், விமானத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் "கடவுளே! நமக்கு நேரமில்லை" என அச்சத்தில் அலறும் சத்தமும் அந்த குரல்பதிவும் பதிவாகியுள்ளது.
இறுதி சிக்னல்
அதனை தொடர்ந்து, வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் உடனடியாக விமானியை தொடர்புகொள்ள தீவிர முயற்சி மேற்கொண்டும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
🚨🇺🇸 “Holy f*ck, we’re out of time” 💔 This is the audio from the Learjet 60 that just crashed in Palm Beach County, Florida, and it's absolutely chilling. 9 people were on board. Something went terribly wrong. Writer: Michael https://t.co/y3wd9XvYB7
— Mario Nawfal (@MarioNawfal) November 1, 2026
தரையை நோக்கி வேகமாக சென்ற விமானம் இறுதி தருணத்தில் வலதுபுறமாக திரும்ப முயன்ற நிலையில், 8,750 அடி உயரத்தில் அதன் இறுதி சிக்னல் பதிவாகியுள்ளது.
அடுத்த சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் தீப்பிழம்பாக விழுந்து வெடித்துச் சிதறியதில், விமானத்திலிருந்த 9 பேரும் உடல்கள் கருகி பலியாகினர். சம்பவம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்துப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan