பேரம் பேச வேண்டாம்.. அநுரவுக்கு சிக்கலை ஏற்படுத்த போவதாக மிரட்டும் அரசியல்வாதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மிரட்டும் வகையில் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில வெளியிட்டுள்ள கருத்து அரசியல் பரப்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில், விகாரமகா தேவி பூங்காவில் பௌத்த தேரர் ஒருவரால் ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக சூனிய பொம்மைகள் வைத்து பூஜைகள் முன்னெடுக்கப்பட்டன.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விடயம் குறித்து ஜனாதிபதி தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இவ்விகாரத்தில் இந்த நாட்டின் 22 மில்லியன் மக்களின் தலைவரும் படைச் சேனாதிபதியுமான ஜனாதிபதி மிகுந்த பயந்த சுபாவம் உடையவராக காணப்படுகின்றார் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஜனாதிபதி அநுரவிற்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் அவர் எச்சரித்து வழக்கை கைவிடச் சொல்லி பேரம் பேச வராதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் உட்பட நாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri