ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு! பெரும் குழப்பத்தில் மேற்கத்திய நாடுகள்
மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப்போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவிலிருந்து தொடருந்து பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய ஜனாதிபதி புதின் வரவேற்றுள்ளார்.
ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு
இதன் பின்னர் வோஸ்டோச்னியில் உள்ள ராக்கெட் ஏவுதளங்களை ஜனாதிபதி புதினுடன் சென்று கிம் பார்வையிட்டுள்ளார்.
இராணுவம் தொடர்பாக கிம்முடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், இருவரும் அனைத்து விவகாரங்களையும் விவாதிப்போம் என புதின் தெரிவித்தார்.
வட கொரியாவின் ஆயுதங்களுக்கு பதிலாக ரஷ்யா உணவு தானியங்களை வழங்கலாம் எனவும், இரு தலைவர்களும் முன்னெடுத்த ஆலோசனைகளின் விரிவான தகவல் வெளியாகாத நிலையில், ரஷ்யாவின் விண்வெளி ஆய்வுகளில் கிம் ஜோங் உன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.