பதற்றத்தினால் மூடப்படும் வான் பரப்புகள்! இலங்கையிலும் இன்று பல விமானங்கள் இரத்து
ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் எயார்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தற்காலிகமாக அதன் வான்வெளியை திறந்ததன் மூலம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் பல விமான நிறுவனங்களால் பல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.
இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை
விமானங்கள்
கொழும்பு - டுபாய்: இன்று பயணிக்கவிருந்த UL 225 வானூர்தி சேவை.
டுபாய் - கொழும்பு: டுபாயிலிருந்து நாடு திரும்பவிருந்த UL 226 வானூர்தி சேவை.
கொழும்பு - ரியாத்: ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 மற்றும் அங்கிருந்து வரவிருந்த UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்கான அறிவுறுத்தல்
இதேவேளை பயணிகள் மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தொடர்பு மையத்தை 1979 எனும் இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று (04) விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு 04 விமானங்கள் இயக்கப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், மஸ்கட்டிலிருந்து ஸ்மார்ட் விங்ஸ் விமானம் 3.Z.- 7648 சரக்கு சுமையுடன் ஓமானின் மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் 8.D.- 822 ஆகியவை 133 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு அதிகாலை 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
இதற்கு கூடுதலாக, துபாயிலிருந்து ஃப்ளை துபாய் விமானம் F.Z.- 569 மற்றும் எமிரேட்ஸ் விமானம் EK- 654 முறையே மாலை 4.50 மணிக்கும் 6.45 மணிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri