அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் வெளியான தகவல்
2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற 192,641 அரச அதிகாரிகளுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் தற்போது முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், 2019 ஜனவரி 1 அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற அனைத்து அரச ஊழியர்களின் ஓய்வூதியங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கை 2026 ஜூலை 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்
அதன் முக்கிய கட்டமாக, 2026 ஜூலை 10ஆம் திகதியன்று இடம்பெற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு நாளுக்குள், தகுதி பெற்ற 192,641 ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியத் தொகைகளை வெற்றிகரமாக வழங்கி முடித்துள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கை
இன்னும் திருத்தப்பட்ட பலன்களைப் பெற வேண்டியுள்ள ஏனைய தகுதியுடைய ஓய்வூதியதாரர்களுக்கான நடவடிக்கைகளும் தற்போது விரைவாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் திறமையான, ஒழுங்குமுறைப்பட்ட மற்றும் தரமான சேவையை வழங்கும் நோக்கில் திணைக்களத்தின் முழு பணியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க ஓய்வூதியதாரர்கள் வெளிப்படுத்தும் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை திணைக்களம் பாராட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.