இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா
இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக்கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரியதாகவும், ஆனால் அரசாங்கம் சரியான நேரத்தில் பதிலளிக்க தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி
11 மணிநேரம் கடந்தும் ஈரானிய கப்பலை காலி துறைமுகத்தில் தரித்து நிறுத்த அனுமதி வழங்காமைக்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கடற்படை பயிற்சியை முடித்து நாடு திரும்பியபோது வளைகுடா பிராந்தியத்தில் (Gulf region) அமெரிக்க கடற்படை கப்பல்கள் இருந்ததால், ஈரான் கப்பலால் அந்த வழியாக செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளது.
ஈரான் கப்பல் பின்வாங்கி, காலி (Galle) துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டது. இக்கப்பல் அங்கு சுமார் 11 மணிநேரம் தங்கியிருந்ததுடன், துறைமுகத்திற்குள் நுழைய இலங்கை அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
11 மணிநேர தாமதம்
11 மணிநேர தாமதத்திற்கு பிறகு, இந்த தகவல் அமெரிக்க படைகளுக்கு சென்றுள்ளது.

அதன் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் (Submarine), ஈரான் கப்பலைத் தாக்குவதற்காக அந்த இடத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய பின்னணியில் குறித்த கப்பல் வருகை தந்து 11 மணி நேரம் கடந்தும் இலங்கை துறைமுகத்திற்கு குறித்த கப்பலை அனுமதிக்காமையின் காரணம் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam