கொள்ளையர்களை காப்பாற்றும் தீவிர முயற்சில் நாமல் - மொட்டு கட்சிக்குள் பூகம்பம்
பல்வேறு குற்றஞ்சாட்டுகளில் சிக்கியுள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பெயர்கள் புதிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருந்த போதிலும், அவர்கள் தொடர்பில் எழுந்த எதிர்ப்புக்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி அவர்களுக்கு பதவி வழங்குவதற்கு தயக்கம் காட்டியுள்ளார்.
எனினும், அவர்களுக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்.
இது தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாமலின் முயற்சி
எதிர்கால எதிர்பார்ப்புடன் நாமல் ராஜபக்சவை இம்முறை அமைச்சரவைக்கு வராமல் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த இரண்டு பேருக்கு எதிராக பொதுஜன பெரமுனவில் எதிர்ப்புகள் உள்ள போதிலும் அவர்களுக்கு பதவி பெற்றுக் கொடுக்கும் தீவிர முயற்சியில் நாமல் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு செல்வதற்கு முன்னர் குறித்த இருவரையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளுமாறு நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் ஜனாதிபதி அதற்கு பதில் அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
கட்சிக்குள் மோதல்
ஆனால் அந்த வாய்ப்பை பெற நாமல் ராஜபக்ஷ நேரடியாக தலையிட்டதால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் சில நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் உள்ள ஜனாதிபதி இன்றைய தினம் நாடு திரும்பியதும் அமைச்சரவை நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க உள்ளார்.
இந்த முரண்பாடு காரணமாகவே புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.