ஜீ.எல்.பீரிஸின் அரசியல் பயணம் எமக்கு சவால் கிடையாது – சாகர காரியவசம்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் அரசியல் பயணம் தமக்கு சவால் கிடையாது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸ் வேறும் அரசியல் பயணமொன்றை ஆரம்பித்துள்ள காரணத்தினால் நிறைவேற்று சபையைக் கூட்டி சரியான முறையில் அவரை தவிசாளர் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர தெரிவித்துள்ளார்.
ஜீ.எல். இன் அரசியல் பயணம்
ஜீ.எல். இன் அரசியல் பயணம் தமது கட்சிக்கு சவால் கிடையாது எனவும் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு அவசரமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் யாப்பிற்கு அமைவாக ஜீ.எல்.பீரிஸ் பதவி நீக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஜீ.எல்.பீரிஸ் கட்சிக்கு சிறந்த முறையில் சேவையாற்றியவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.