சர்வதேச பிடியாணை உத்தரவில் கைதான இலங்கையர்! இந்தியா புறப்பட்ட CID அதிகாரிகள்
சர்வதேச பிடியாணை உத்தரவில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 'பொடி லஸ்ஸி'யை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிஐடி அதிகாரிகள் புறப்பட்டு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என அழைக்கப்படும் பொடி லஸ்ஸி, கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
இந்தியா புறப்பட்ட CID அதிகாரிகள்
இவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பொடி லஸ்ஸி சொகுசு கார் ஊர்வலத்தில் கொழும்புக்குச் சென்றிருந்த நிலையில், அதன் பின்னர், அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

'குடு சலிந்து' மற்றும் பாதாள உலகக் கும்பல் தலைவர் 'பொடி லஸ்ஸி' ஆகியோர் இரகசியமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகித்தனர்.
இந்த இரண்டு குற்றவாளிகளும் கடல் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் முன்னர் கூறியிருந்தனர்.
பாரிய குற்றங்களில் தொடர்பு
இந்நிலையில், இந்தியாவில் தலைமறைவாகியிருந்து கொலை, பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் இரண்டு அதிகாரிகள் இந்த பாதாள உலகத் தலைவரை இலங்கைக்கு அழைத்து வர நேற்று (25) இந்தியா புறப்பட்டுள்ளனர்.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri
விவாகரத்திற்கு ஓகே சொன்ன ரோஹினி, ஆனால் மனோஜிற்கு அவர் வைத்த செக்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri