ஜனாதிபதியின் லண்டன் விஜயம்:குமார வெல்கம வெளியிட்டுள்ள கவலை
ஐக்கிய இராச்சியத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவான தூதுக்குழுவுடன் சென்றமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20.09.2022) உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“தேவையற்ற செலவுகளை குறைக்க மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகளை, ஜனாதிபதி தன்னுடன் அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.
குமார வெல்கம கவலை
ஜனாதிபதி விக்ரமசிங்க ஏன் ஐக்கிய இராச்சியத்திற்கு தம்முடன் சுமார் பத்து பிரதிநிதிகளை அழைத்து சென்றார்?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் சிராந்தி ராஜபக்ச ஆகியோர் தமது
பயணங்களின் போது அவர்களுடன் ஒரு பெரிய குழுவை அழைத்துச் சென்றதன் காரணமாகவே
இன்று நாடு நெருக்கடியை எதிர்கொள்கின்றது.”என கூறியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
