பொது இடத்தில் நாமலுக்கு நேர்ந்த பரிதாப நிலை
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை - டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல் - சற்றுமுன் பலர் கைது (Video) >>> மேலும்படிக்க
2 இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது, தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. இதை பிரிட்டன் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்று பிரிட்டன் எம்.பிக்கள் இருவர் அந்த நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளனர்.
ஈழத் தமிழர்களை கொலை செய்தது இலங்கை அரசு! அங்கீகரித்து அறிவிக்குமாறு பிரிட்டன் எம்.பிக்கள் வலியுறுத்து
>>> மேலும்படிக்க
3 உலகின் சிறந்த விமான சேவை நிறுவனமாக கட்டார் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமான சேவை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக பிரித்தானியாவின் ஸ்கைட்ரெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சிறந்த விமான சேவைகளின் பெயர் பட்டியல் வெளியீடு >>> மேலும்படிக்க
4 அனுராதபுரம் மிகிந்தலை கல்லாட்சிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் வீதியில் புரட்டி போட்டு கடுமையாக தாக்கியுள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பொலிஸ் அதிகாரியை புரட்டி போட்டு தாக்கிய இருவர் >>> மேலும்படிக்க
5 கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது புதல்வர் தஹாம் சிறிசேனவுடன் கலந்துக்கொண்டார். இது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் கலந்துக்கொண்ட முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டமாகும்.
பொருளாதார நெருக்கடியை விட மனித உரிமை பேரவையின் சர்வதேச நெருக்கடி பயங்கரமானது >>> மேலும்படிக்க
6 மலேசியாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி சதி நடவடிக்கையில் ஈடுபடும் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களிடம் சிக்கிக்கொள்ளாதீர்கள்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை >>> மேலும்படிக்க
7 கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளியின் ஊடாக இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கடற்பகுதியில் நடந்த அதிசய சம்பவம் >>> மேலும்படிக்க
8 சூரியவெவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராபக்ஷ புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சூரியவெவ சிறுவர்கள் தொடர்பில் ஊடக அறிக்கைகள் வெளியானது.
மக்களின் கடும் எதிர்ப்பால் கூட்டத்தை தவிர்த்த நாமல் >>> மேலும்படிக்க
9 சவூதி தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு அந்நாட்டுக்கான கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் பங்கேற்றுள்ளார்.
சவூதி தேசிய தின நிகழ்வுகளில் ஞானசார தேரர்! வைரலாகும் புகைப்படங்கள் >>> மேலும்படிக்க
10 உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவைக் கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றையதினம் 07 வீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம் >>> மேலும்படிக்க