மக்களின் கடும் எதிர்ப்பால் கூட்டத்தை தவிர்த்த நாமல்
சூரியவெவ பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராபக்ஷ புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சூரியவெவ சிறுவர்கள் தொடர்பில் ஊடக அறிக்கைகள் வெளியானது.
மக்கள் எதிர்ப்பு
அதற்கமைய, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் சூரியவெவ பிரதேச செயலகத்தில் நேற்று கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் மக்கள் வெளியிட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக நாமல் ராஜபக்ஷ அந்த கூட்டத்தை தவிர்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் சுமணசேகர தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.