எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு
3,000 ஆண்டுகள் பழமையான ஒரு பிரம்மாண்டமான "தங்க நகரம்" எகிப்தின் கிழக்கு பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள சுகாரி (Sukari) மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் தங்கச் சுரங்கம் மட்டுமல்லாது, அக்காலத்தில் மக்கள் செழிப்பாக வாழ்ந்த ஒரு முழுமையான குடியிருப்புப் பகுதியாகவும் விளங்கியது.
தூதன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதற்கு இணையாக இந்த கண்டுபிடிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தங்க நகரம்
எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் "பண்டைய தங்க நகரத்தை மீட்டெடுத்தல்" என்ற திட்டத்தின் கீழ் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

பாறைகளைத் தகர்த்து தங்கத்தைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் கற்கள், வடிகட்டுதல் குளங்கள் மற்றும் தங்கத்தை உருக்கி சுத்திகரிக்கப் பயன்படுத்தப்பட்ட களிமண் உலைகள் போன்றவை நல்ல நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.
சுரங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வாழ்ந்த வீடுகள், பட்டறைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை முறையாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. இது அந்த காலத்திலேயே எகிப்தியர்கள் எவ்வளவு மேம்பட்ட நிர்வாகத்திறன் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri