டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது ஷமி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருப்பினும், ஒருநாள், 20- க்கு 20, ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் முகமது ஷமி கடந்த 2013 நவம்பர் 6ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரராக அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, கடந்த 2023 உலகக் கிண்ணத்தில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
2025 செம்பியன்ஸ் கிண்ணமே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய போதிலும், அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி ரசிகர்களை மகிழ்விப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பெரும் பிளவு! தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் சிக்கல்