கொழும்பை மூழ்கடித்த திடீர் கனமழை! ஸ்தம்பித்த போக்குவரத்து..
கொழும்பின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தை, கோட்டை, மருதானை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மழை
இதற்கிடையில், வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வை ரயில் நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞைக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தொடருந்து சேவைகளிலும் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், வெள்ளம் தேங்கியுள்ள வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.