அமெரிக்க வரலாற்றில் 2027 ஜனவரியில் புதிய திருப்பம்..! நெருக்கடியில் ட்ரம்ப்
அமெரிக்காவில் 2026 நவம்பர் மாதம் இடம்பெற்ற இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியைத் தோற்கடித்து ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதுடன், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக் கைப்பற்றியுள்ளதாக கனடாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும், கனடா வாழ் தமிழ்ச் சமூகப் பிரமுகருமான நேரு குணரட்னம் (Nehru Gunaratnam) தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருந்தபோது, ஈரான் போர் போன்ற தன்னிச்சையான முடிவுகளால் அவரது அரசியல் செல்வாக்கு சரிவடைந்துள்ளது.

அத்துடன், கறுப்பின மக்கள் அதிகளவான வாக்குகளைப் பெற்று முக்கியமான பதவிகளுக்கு வந்துள்ளனர்.
மேலும், பல பெண்களுக்கு இந்தத் தேர்தலின் மூலம் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று, ஆட்சியில் இருந்தபோது ட்ரம்ப் பல்லாயிரக்கணக்கான டொலர்களை ஊழல் செய்ததாகவும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க்கும் பெருமளவிலான டொலர்களைச் செலவிட்டார். ஆனாலும், இந்தத் தேர்தல் அவர்களுக்குச் சாதகமாக அமையவில்லை.
மாறாக, ட்ரம்ப் தற்போது வெற்றி பெற்றிருந்தாலும், அவர் நினைப்பதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.