இலங்கை வாழ் சிறுவர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மற்றும் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐஸ் (Ice) போதைப்பொருள் தொடர்பாக 18 வயதுக்குட்பட்ட ஒருவர் மாத்திரமே கைது செய்யப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1,874 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்கள்
மேலும், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,889 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 21 வயதுக்கு மேற்பட்ட 11,737 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 முதல் 18 வயதுக்குட்பட்ட 1,068 சிறுவர்களும், 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
200க்கும் மேற்பட்ட சிறுமிகளும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள்
இந்த நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்வி அமைச்சின் ஊடாக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், மதத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக இதுவரை 2,59,000 சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், புனர்வாழ்வு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.