நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, 20 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிரிஷ்' ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நவம்பர் 20 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு (CIABOC) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் மற்றொரு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை நவம்பர் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று (06) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடந்த 3 ஆம் திகதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், எயார்பஸ் விமான கொள்வனவு மோசடி தொடர்பில் 24 குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், 19 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு நீதிமன்றம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
எனவே, கிருஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தாலும், எயார்பஸ் விமான கொள்வனவு மோசடி சம்பவம் தொடர்பாக அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல்