அரசாங்கத்தின் எவரும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புபடவில்லை
அரசாங்கத்தின் எவரும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புபடவில்லை என பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கத்தைச் சேர்ந்த வரும் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களுடன் தொடர்பு பேணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல், போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு வலையமைப்பினை உடைத்தெறிவதாகத் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த வெற்றியை ஆரோக்கியமான நிலையாக பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எதிர்க்கட்சிகள் இந்த விடயங்களை கருத்திற் கொள்ளாது எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதாக பிரதி அமைச்சர் கௌசல்யா வீரரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.