திகன கலவரத்தின் பின் ஜனாதிபதியிடம் மக்கள் கேட்ட கேள்வி..!
எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டவை அல்ல, ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் வெறும் ஊடகக் காட்சிகளே என தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷரீப் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் செங்கோலைக் கைப்பற்ற முயற்சித்தமை உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
எதிர்க்கட்சியினர் மக்கள் எதிர்பார்க்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஊடகங்களில் தங்களது பெயரும் புகைப்படங்களும் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், எதிர்க்கட்சியினர் ஆட்சியில் இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார்.
அதேவேளை, திகன இனக்கலவரத்தின் போது அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம், முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுப்பதால் எதிர்காலத்தில் அவருக்கான வாக்குகள் குறையக்கூடும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைத்து இன மக்களையும் சமமாகக் கருதுவதாகவும், இன அடிப்படையில் வாக்கு அரசியல் செய்வதில்லை என்றும் அவர் பதிலளித்ததாக பஸ்மின் ஷரீப் தெரிவித்தார். அந்த நிலைப்பாடே தன்னை தேசிய மக்கள் சக்தி அரசியலில் இணைவதற்குத் தூண்டிய முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..