மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை - வெளியான அறிவிப்பு
2026 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்போவதில்லை என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரகம் (NSO) அறிவித்துள்ளது.
எல் நினோ காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நீர்த்தேக்கங்களில் போதுமான நீர் இருப்பும் காணப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு
இதற்கு முன்னர் NSO, மின்சாரக் கட்டணத்தை 2.88வீதம் அதிகரிக்கக் கோரியிருந்தது.
எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அதனை 1.46% ஆகக் குறைத்து பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போதைய நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழைவீழ்ச்சி காரணமாக நீர் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், 2026 இறுதி காலாண்டுக்கான மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது.