பெண்ணொருவர் குத்திக் கொலை - காதலன் விபரீத முடிவு
கண்டி, புஸ்ஸல்லாவ பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதுடன், காதலன் என கூறப்படும் நபர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொரகல பகுதியில் உள்ள வீடொன்றில் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் தொரகல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும் குருநாகல் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஆணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வன்முறையாக மாறிய வாக்குவாதம்
பெண்ணை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நிலையில், கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் ஏற்கனவே திருமணமான நிலையில், விவகாரத்து பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.
இதன்போது கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஆணுடன் காதல் உறவில் இருந்ததாக தெரியவருகிறது.
நேற்றையதினம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியாமல், அது கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.