லக்ஷ்மன் கதிர்காமர் மரணத்தில் சிக்க வைக்கப்பட்ட தமிழர்கள்! சதிகளின் பின்னணிகள் அம்பலம்
இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிவிவகார அமைச்சருமான லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறி, முக்கிய தலைவர்களால் தமிழ் இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, சுமார் 13 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர், இரவு வேளையில் தனது துணைவியுடன் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது படுகொலைக்குப் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளே இதற்குப் பின்னணியில் இருப்பதாக அக்காலகட்டத்தில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், இந்தப் படுகொலைக்குப் பின்னால் அக்காலத்தில் ஆட்சியிலிருந்த சில முக்கிய தலைவர்களின் சதி இருந்ததாகவும், 13 ஆண்டுகள் போராடிய பின்னர், இந்த வழக்கில் பெயரிடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமரானது எப்படி..
அதேபோன்று, லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டபோது அவருடன் இருந்த அவரது மனைவி, நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்னிலையாகவில்லை என்பதும் இந்த வழக்கில் முக்கிய விடயமாகப் பார்க்கப்பட்டது.
லக்ஷ்மன் கதிர்காமர் பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மறைவுக்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றார்.
இந்த விடயம் தொடர்பில் இதுவரை போதிய சாட்சியங்கள் கிடைக்காத காரணத்தினால், லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் கண்டறியப்படவில்லை என்பதும் கவலைக்குரிய விடயமாகும் என்றார்.