வரலாற்றில் முதல்முறையாக ஆளுநராக தெரிவான கருப்பின பெண்
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜோர்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சிளை சேர்ந்த கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க மாகாணத்தின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின பெண் என்ற வரலாற்றுப் பெருமையை அவருக்கு கிடைத்துள்ளது.
உள்ளாட்சிப் பதவிகள்
அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஜோர்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள வாக்குகளில் 54.2 சதவீத வாக்குகளை கீஷா லான்ஸ் பெற்றுள்ளார்.
எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளரும் தொழிலதிபருமான ரிக் ஜாக்ஷன் 45.8 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். ஜோர்ஜியா மாகாண ஆளுநர் தேர்தலில் 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.