ஒரு துளி கூட வருத்தம் இல்லை..! தேர்தல் தோல்வி குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு
காங்கிரஸின் கட்டுப்பாட்டை ஜனநாயகக் கட்சியினர் (Democrats) மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில் மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிட்டால் அது குறித்து சிறிதளவு கூட கவலை இல்லை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் சற்று முன்னர் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
இதன்போது அவர் மேலும் அவர், "இத்தகைய நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜனநாயகக் கட்சியையே அழித்துவிடும், எந்தவொரு காரணமும் இல்லாத ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானமாகவே இருக்கும்.
WATCH LIVE: Trump speaks after Democrats midterm wins https://t.co/aEkuuYI7Bi
— Fox News (@FoxNews) November 4, 2026
நமது நாடு தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இப்போது மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது” என கூறினார்.
ட்ரம்ப், அமெரிக்க பிரதிநிதிகள் சபையால் (House of Representatives) இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
ஆனால் இரண்டு முறையும் செனட் சபையால் (Senate) அவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.