தேர்தல் தோல்விக்கு ஈரான் காரணம்.. குற்றம் சாட்டும் ட்ரம்ப்
இடைத்தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் பீட் ஹெக்ஸெத்தை நீக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் ஏற்பட்ட கடுமையான தோல்விகளுக்குப் பிறகும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தை பதவியிலிருந்து நீக்கும் எண்ணம் இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தோல்விகளுக்கு ஈரான் மீதான போரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமியக் குடியரசான ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீவிரமாக வாதிட்டு வரும் பீட் ஹெக்ஸெத்தை மாற்றும் எண்ணம் உள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு,
"இல்லை, அவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்றே நான் கருதுகிறேன்" என்று பதிலளித்துள்ளார்.

YOU MAY LIKE THIS..