சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்: இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்
சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை சம்மாந்துறை பொலிஸார் நாடியுள்ளனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக பல்வேறு துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை கைது செய்யவே இவ்வாறு உதவி கோரப்பட்டுள்ளது.
முறைப்பாடு
குறிப்பாக முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் குறித்த நபர் பாலியல் ரீதியான தொந்தரவுகளை கொடுத்ததாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
47 வயதான அஹமட் லெப்பே மொஹமட் அஸ்லாம் என்ற நபரை கைது செய்ய உதவுமாறு பொது மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பிரதேசத்தைச் விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உதவியை நாடியுள்ள பொலிஸார்
சந்தேகநபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களில் வெளியிட்டு பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்த சந்தேக நபர் பற்றி தகவல் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071-8591162 என்ற எண்ணிலோ அல்லது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தை 067-2260222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.