கம்பஹா பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம்! நிர்வாகம் வெளியிட்டுள்ள மறுப்பு
கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல், பகிடிவதைச் சம்பவம் அல்ல என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட புகைப்படங்கள்
கடந்த நவம்பர் 2ஆம் திகதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடே மோதலுக்குக் காரணம் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் திருத்தப்பட்டு, அதனை பகிடிவதை சம்பவமாகச் சித்தரிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பாதுகாப்பான, பகிடிவதையற்ற சூழலில் வழமைபோல் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.