பசிலுக்கு எதிரான கைது உத்தரவு அநுரவுக்கும் பொருந்துமா.. எழுந்துள்ள கேள்வி

Anura Kumara Dissanayaka Basil Rajapaksa Mujibur Rahman
By Rakesh Nov 05, 2026 03:28 AM GMT
Report

அரசின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு, சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில்  புதன்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சட்டம் அனைவருக்கும் சமமா..

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"துறைமுகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசு அமெரிக்காவிடமிருந்து 17 மில்லியன் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, அப்பகுதியில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டு வேலைத்திட்டம் எமக்கு இல்லாமலாகியுள்ளது.

துறைமுகத்தில் சீனாவின் வேலைத்திட்டத்துக்கு அருகில் அமெரிக்காவின் கமராக்களைப் பொருத்துவதற்கு எடுத்த அரசின் பிழையான முகாமைத்துவமே இதற்கு முழுமையான காரணமாகும்.

பசிலுக்கு எதிரான கைது உத்தரவு அநுரவுக்கும் பொருந்துமா.. எழுந்துள்ள கேள்வி | Government Mismanagement

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய ஒலிபரப்புச் சங்கத்தின் மாநாட்டுக்கு அரசு 10 கோடி ரூபா வழங்கியுள்ளது. 'இந்த நிதி அரசின் பணம் அல்ல' என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார். அப்படியென்றால், அந்தப் பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ஏன் அமைச்சரவைக்கு மகஜர் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்? சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்குச் செலவிடப்படும் நிதி திறைசேரியின் பணமாகும். அது மக்களின் பணமாகும்.

2014ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி பஸில் ராஜபக்ச அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில், அவரை உடனே கைது செய்யுமாறு நீதிமன்றம் பகிரங்க உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், ஜனாதிபதிக்கும் இந்த உத்தரவு செல்லுபடியாக வேண்டும்.

பசிலுக்கு எதிரான கைது உத்தரவு அநுரவுக்கும் பொருந்துமா.. எழுந்துள்ள கேள்வி | Government Mismanagement

கொழும்பு - மாளிகாவத்தையிலுள்ள பி.டி. சிறிசேன குரே மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்கள் இடம்பெறுவதால், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் அந்த மைதானம் மூடப்பட்டுப் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் கால்பந்தாட்டப் பயிற்சிகளை மேற்கொள்வதும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதுமான இந்த மைதானம் மூடப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 'பிரபுக்கள் பாதுகாப்புத் தேவையில்லை' என்று கூறியவர்கள், தற்போது யுத்த காலத்தில் கூட இல்லாதவாறு பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்" என குறிப்பிட்டுள்ளார். 

தனது கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனாதிபதி அநுர

தனது கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனாதிபதி அநுர

ஜனாதிபதியாக இருந்த மகிந்தவுக்கு ஏற்பட்ட அச்சம் : அம்பலப்படுத்தும் பேராசிரியர்

ஜனாதிபதியாக இருந்த மகிந்தவுக்கு ஏற்பட்ட அச்சம் : அம்பலப்படுத்தும் பேராசிரியர்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US