மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல்

Sri Lanka Police Galle
By Dhayani Nov 06, 2026 01:47 AM GMT
Report

காலி- கராபிட்டிய மருத்துவ பீட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியொருவர் தொடருந்து கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட விசாரணையில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கடந்த (3) ஆம் திகதி அதிகாலை பாலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து தண்டவாளத்தை ஆய்வு செய்ய வந்த திணைக்கள ஊழியர் ஒருவர் வீதியில் கிடந்த பெண் ஒருவரின் சடலத்தை பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

மன அழுத்தம் மற்றும் கல்வி நெருக்கடி 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர், காலியில் உள்ள கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவியான 25 வயதுடைய பெலியத்த, வலஸ்முல்ல வீதியைச் சேர்ந்த படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா என அடையாளம் காணப்பட்டார்.

மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல் | Karapitiy Medical Student Found Dead Investigation

அவரது பிரேதப் பரிசோதனையில், அவர் உயிரிழந்த நேரத்தில் எதிர்கொண்டிருந்த மன அழுத்தம் மற்றும் கல்வி நெருக்கடி குறித்த பல உணர்வுப்பூர்வமான விபரங்கள் வெளிப்பட்டுள்ளன.

மேலும், அவர் தனது பெற்றோருக்கும் கணவருக்கும் அனுப்பிய கடைசி குறுஞ்செய்திகள், துயர சம்பவத்தின் மௌனச் சான்றுகளாக பார்க்கப்படுகிறது.

உயிரிழந்த மாணவியின் தந்தை வாக்குமூலம்

உயிரிழந்த மாணவியின் தந்தை, காலி மரண விசாரணை அதிகாரி முன் வழங்கிய சாட்சியத்தில், தனது மகள் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதி மருத்துவப் பீடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அவரும், அக்மீமன, தலகஹா பகுதியை சேர்ந்த அவரது கணவரான 23 வயது விசாமிதா விசாரத விஜேநாயக்கவும் சுமார் நான்கு ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்ததாகவும், இரு தரப்பினரின் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல் | Karapitiy Medical Student Found Dead Investigation

அவரது குடும்ப வாழ்க்கையில் எந்த குடும்ப பிரச்சினையோ அல்லது பிளவோ இல்லை என்றும், ஆனால் படிப்பின் அழுத்தம் அவரது வாழ்க்கையை கடுமையாக பாதித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

"எனக்கு வேலை அதிகமாக இருக்கிறது, நான் மன அழுத்தமாக உணர்கிறேன், நான் ஓய்வெடுக்கக் கோவிலுக்கு செல்ல வேண்டும்," என்று அவர் சமீபத்தில் தன் தாயிடம் கூறியிருந்த நிலையில் பின்னர் அவரது கணவர் அவரைக் கோவிலுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு வேலை அதிகமாக இருப்பதாலும், தனியாகப் படிக்க வேண்டியிருப்பதாலும் வீட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் தன் கணவரிடம் கூறியிருந்த நிலையில்,நவம்பர் 2 ஆம் திகதி பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியுள்ளார்.

இதன்பின்னர் மீண்டும் இரவு சுமார் 10.22 மணியளவில் குறுஞ்செய்தியில், "படிப்பை முடித்து நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு செல்வதற்காக நான் காத்திருக்கிறேன். கவனமாக இருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் அதே நாளில், நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில், அவர் தந்தையின் கைபேசிக்கு, "அப்பா, நான் உங்களை நேசிக்கிறேன், அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்ற செய்தியையும் அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து காலை உடனடியாக தந்தை மகளை மருத்துவ பீட விடுதிக்கு பார்வையிட வந்த நிலையில், மகள் அங்கு இல்லை என்பதினை அறிந்துள்ளார். கணவர் பலமுறை தொலைபேசியில் அழைத்திருந்தும் பதிலளிக்கவில்லை.

மரணம் குறித்து திறந்த தீர்ப்பு

இதனையடுத்து பொலிஸாரின் தகவலுக்கமைய மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டதுடன்,தனது மகளின் மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் பிரேதப் பரிசோதனையின் போது தெரிவித்திருந்தார்.

மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல் | Karapitiy Medical Student Found Dead Investigation

இந்த மரணம் தொடருந்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டதா அல்லது விபத்தா என்பது குறித்து காலி பொலிஸ் தற்போது ஒரு சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கொழும்பிலிருந்து காலிக்கு வந்துகொண்டிருந்த தொடருந்து மோதியதாக ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்டபோதிலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இரண்டு தொடருந்துகளின் சாரதிகளும் அவர் மீது தொடருந்து மோதியதைக் காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே, அறிக்கை மற்றும் தொடருந்து சாரதிகளிடமிருந்து மேலதிக சான்றுகளைப் பெற வேண்டியதன் அடிப்படையில், காலி தேசிய மருத்துவமனை சிறப்பு தடயவியல் மருத்துவர் மரணம் குறித்து திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 

நடுவீதியில் மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - கணவர் வெளியிட்ட வாக்குமூலம்

நடுவீதியில் மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - கணவர் வெளியிட்ட வாக்குமூலம்

அரசின் மீது அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரங்களை கோரும் சீலரத்ன தேரர்

அரசின் மீது அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரங்களை கோரும் சீலரத்ன தேரர்

மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US