அரசின் மீது அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டு.. ஆதாரங்களை கோரும் சீலரத்ன தேரர்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஏன் இதுவரை பதிலளிக்கவில்லை என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயம் குறித்து கருத்து தெரிவித்தார்.
புலம்பெயர் அமைப்புகள்..
இதன்போது அவர் மேலும், "தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகப் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தது வீதிகளில் இறங்கிப் போராடியது.

இன்று அதேபோன்றதொரு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை கொண்டுவர முயற்சிக்கின்றது.
அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
அவை தொடர்பான விபரங்களை ஏன் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை? அரசாங்கம் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.