எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், சில நிறுவனங்களால் வழங்கப்படும் எரிபொருளில் பற்றாக்குறை நிலவுவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண கூறியுள்ளார்.
எண்ணெய்க்கு பற்றாக்குறை இல்லை
இந்த நிலையை சரிசெய்யும் வகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் தொடர்ந்து எரிபொருளை வழங்கி வருவதாக விடுத்த விசாரணையில் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது எண்ணெய்க்கு பற்றாக்குறை இல்லை என்றும், போதுமான எண்ணெய் இருப்பு உள்ளது. எண்ணெய் வழங்கப்பட்டு வருகின்றது.
நஷ்டம் காரணமாக தனியார் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் எண்ணெயின் அளவை குறைத்ததே இதற்கு காரணம். மேலும் சில இடங்களில் சிபெட்கோ (CIPET) கிடங்குகள் இல்லாததால், அங்கு வரிசைகள் ஏற்படுகின்றமையே பிரச்சினையாகியுள்ளது.
சிபெட்கோ கிடங்குகள் இல்லாத 52 இடங்கள் அடையாளம்
சிபெட்கோ கிடங்குகள் இல்லாத 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் வெளியிடும் அளவின் அடிப்படையில் அந்த இடங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஆனால் சில பகுதிகளில், அந்த நிறுவனங்கள் எண்ணெய் வெளியிடப்படாததால், சில இடங்களில் சிறிய வரிசைகள் ஏற்படலாம். பொதுவாக, விநியோகத்தில் ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததில்லை. தேவைக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. விநியோகப் பணிகள் முடிந்துவிட்டன.
ஏனெனில் ஏனைய நிறுவனங்களில் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால், அவர்கள் சிபெட்கோ (Cipetco) மூலம் அதிகமாக விநியோகம் செய்கின்றார்கள். அதில் எந்த விநியோக நெருக்கடியும் இல்லை என தெரிவித்துள்ளது.
மர்மமாக உயிரிழந்துகிடந்த இளம் மருத்துவ பீட மாணவி - இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தியில் வெளியான தகவல்