சீரற்ற காலநிலை தீவிரம்: யாழ். கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களைக் கடந்த கர்ப்பிணிப் பெண்கள், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் நேற்றுமுன்தினம் (04.11.2026) மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
பருவபெயர்ச்சி மழை
இதன்போது, இந்த மாதம் யாழ்ப்பாணத்தில் 331 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் வசிக்கும் 36 வாரங்களைக் கடந்த கர்ப்பிணிகள், யாழ்ப்பாணம் நகரில் உள்ள உறவினர்களின் வீடுகளிலோ அல்லது ஊர்காவற்றுறை வைத்தியசாலையிலோ தங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சீரற்ற காலநிலையின் போது கடல் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பிரசவத்தை எதிர்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.