கொழும்பை புரட்டிப்போடும் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்
கொழும்பில் தற்போது பெய்து வரும் கனமழைக் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் முழ்கியுள்ளதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை சற்றுமுன்னர்(06.11.2026) பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் பெய்து வரும் கனமழைக் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
இதற்கிடையில், வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வை ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது என்றும், தொடருந்து சேவைகள் தங்களின் சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், தொடருந்து திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதுடன், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


