2,000 பேருக்கு என்ன நடந்தது.. பிள்ளையான் விவகாரத்தில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் அசாத் மௌலானாவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் அவர் வழங்கியதாகக் கூறப்படும் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தில் முன்னாள் புலனாய்வுப் பிரிவு அதிகாரி சுரேஷ் சலே, பிள்ளையான் உள்ளிட்டோர் தொடர்பில் பல்வேறு தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு, புத்தளத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பு மற்றும் தாக்குதல் தொடர்பான ஏனைய தொடர்புகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்புகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சில நபர்களின் தொடர்புகள் குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிள்ளையானுடன் தொடர்புடைய 2,000-க்கும் மேற்பட்டோருக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஊடாக ஊதியம் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அரச தரப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..