வானில் என்ன நடக்கிறது! ஐரோப்பாவைச் சுற்றிவளைக்கும் மர்ம அச்சுறுத்தல்கள்
ஐரோப்பிய நாடுகளின் விமானப் போக்குவரத்துக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 2ஆம் திகதி முதல் ஐரோப்பிய வான்பரப்பில் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பதிவாகியிருந்த போதிலும், நவம்பர் 5ஆம் திகதி பல நாடுகளின் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.
அயர்லாந்தின் டப்ளினில் இருந்து ரோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது பிரான்சிலுள்ள விமானப்படைத் தளமொன்றுக்கு திருப்பி விடப்பட்டது.
குறித்த விமானத்தில் இருந்த 151 பயணிகளும் ஆறு பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று, பல்கேரியாவில் மூன்று ரயன்எயார் விமானங்களுக்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மேலும், லண்டன், கோபன்ஹேகன் மற்றும் மட்ரிட் ஆகிய நகரங்களிலிருந்து செர்பியாவுக்குச் சென்ற விமானங்களும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..