சவூதி தேசிய தின நிகழ்வுகளில் ஞானசார தேரர்! வைரலாகும் புகைப்படங்கள்
சவூதி தேசிய தின நிகழ்வில் ஞானசாரர்
சவூதி தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு அந்நாட்டுக்கான கொழும்பு தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வுகளில் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் பங்கேற்றுள்ளார்.
இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் சவூதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் ஞானசார தேரர் பங்கேற்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பகிரப்படும் புகைப்படங்கள்
இஸ்லாமிய மத வழிபாட்டு முறைகள் சட்டங்கள் என்பன தொடர்பில் தொடர்ச்சியாக கடுமையான விமர்சனங்களை செய்து வந்தவர் ஞானசார தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன், ஞானசார தேர்ரும் சவூதி தேசிய தின நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாற்றமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.