இன்று இரவு இலங்கை வரும் கோட்டாபய! நேரம் தொடர்பான முழு விபரம் வெளியானது
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய நடைமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களில் புதிய நடைமுறை! நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு >>> மேலும்படிக்க
2 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையை 300 ரூபாவுக்கு குறைக்க முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து நிதி வருவதால் இவ்வாறு டொலரின் பெறுமதியை குறைக்க முடியும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு கிடைக்கும் தொடர் உதவிகள்! டொலரின் பெறுமதி குறையலாம் >>> மேலும்படிக்க
3 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 115 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் >>> மேலும்படிக்க
4 சமகாலத்தில் தென்னிலங்கை அரசியலில் நிலையான தலைமைத்துவம் இன்மையால் சிறிய கட்சிகள் சிதறுண்ட நிலையில் காணப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து போட்டியிட்ட பல சிறிய கட்சிகள் தற்போது பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.
மீண்டும் களமிறங்கிய மகிந்த - தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் >>> மேலும்படிக்க
5 இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஜனாதிபதியின் முயற்சி:பிரித்தானிய பிரதமர் பாராட்டு >>> மேலும்படிக்க
6 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று மாலைதீவுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நேர மாற்றத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள கோட்டாபய >>> மேலும்படிக்க
7 நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். மத்திய வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.
“ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்கிறேன்” மத்திய வங்கி ஆளுநருக்கு பதிலாக செல்ல தயார் - அலி சப்ரி அதிரடி >>> மேலும்படிக்க
8 லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் புதிய முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இலங்கையிலுள்ள நண்பர்களுக்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் இப்படியும் உதவலாம்! வெளியானது விசேட அறிவிப்பு >>> மேலும்படிக்க
9 இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டான ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற கப்பல் இன்று அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியினால் நாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் >>> மேலும்படிக்க
10 காலிமுகத்திடலை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பௌத்த சமயத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை எனவும் கத்தோலிக்க சமயத்திற்கு அதனை விடவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
ரணில் பிரதமரானதும் போராட்டத்தில் இருந்து வெளியேறிய குழு: பலாங்கொட கஸ்சப்ப தேரர் >>> மேலும்படிக்க